business

img

பால் விலையும் உயர்கிறது..?

புதுதில்லி:
இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 90 ரூபாயையும் தாண்டி விட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 200 அளவிற்கு உயர்த்தப்பட்டு, தற்போது வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 810 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக, பால் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் அருகே 25 கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் அங்குள்ள ராமர் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

அந்தக் கூட்டத்தில் பேசிய பால் உற்பத்தியாளர்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே, பால் விலையை மார்ச் 1 அன்று முதல் லிட்டருக்கு 12 ரூபாய் அளவிற்கு உயர்த்தினால்தான் கட்டுப்படியாகும் என்று கூறியுள்ளனர்.ரத்லம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹிராலால் சவுத்ரியும் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், “கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பால் விலையை உயர்த்த முடியாமல் போய்விட்டது.ஆனால் இப்போது தீவன விலை உயர்வு, அத்துடன் டீசல், பெட்ரோல் விலையும் உயர்ந்து விட்டது. ஒரு எருமை மாட்டினை 1முதல் 1.50 லட்ச ரூபாய் விலைக்கு வாங்குகிறோம். ஆனால் ஒரு லிட்டர் பாலின் விலை 43 
ரூபாயாகவே உள்ளது. எனவே, இதன் விலையை இனி லிட்டருக்கு 55 ரூபாயாக உயர்த்த முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

;